Pages

Sep 17, 2013

மக்களுக்காக குரல் கொடுக்க கூடிய சமூக சிந்தனை கொண்டவர்களுக்கே முஸ்லிம் காங்கிரஸில் இடமுண்டு.

மக்களுக்காக குரல் கொடுக்க கூடிய சமூக சிந்தனை கொண்டவர்களுக்கே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இடமுண்டு.

இலங்கை முஸ்லிம்களுக்கென்று மறைந்த மாபெரும் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் சுயநலவாதிகளுக்கும் கொள்ளையர்களுக்கும் கூஜாத் தூக்கிகளுக்கும் இடமில்லை. மக்களின் சுக துக்கங்களிலும், மக்களின் அபிலாசைகளிலும், மக்களுக்கான உரிமைக்கும், அடிமைத்தனம் என்ற அச்சம் இல்லாமல் முஸ்லிம்கள் வாழவேண்டும் அதற்காகவும் குரல் கொடுப்பவர்கள் மாத்திரம்தான் இக்கட்சியில் இருக்க முடியும் என்றார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சூறா சபைச் செயலாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமாகிய யூ.எம்.வாஹிட். மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் 12ஆவது நினைவூட்டலும் துஆப் பிரார்த்தனையும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத்தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்: முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு இற்றைவரைக்கும் முஸ்லிம்களுக்காக ஓங்கி ஒலித்து தைரியமாகவும் திடகாத்திரமாகவும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இக்கட்சி யாரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்ற வில்லை, பதவிக்காகவும், அற்ப சொற்ப பணத்துக்காவும், கேவலமான சில சலுகைகளுக்காகவும், இன்னும் தன்னைத் தலைவன் என்று மக்கள் அழைக்கவேண்டும் என்ற நப்பாசைக்காகவும் சிலர் பிரிந்து சென்று கூஜாத்தூக்கிகளாக செயல்பட்டுக்கொண்டு இக்கட்சியை தூசிக்கின்றனர். நல்லவர்கள் மக்களுக்காகச் சிந்திக்கின்றவர்கள் ஒருபோதும் இக்கட்சியை விட்டு எங்கும் செல்லவில்லை அப்படி நல்ல திறமையானவர்களை இக்கட்சி வெளியேற்றவுமில்லை வெளியேற்றவும் மாட்டாது. ஊருக்கொரு கட்சியும், தனக்குத்தானே பதவியும் சூட்டிக்கொண்டு முஸ்லிம் மக்களை ஒரு போதும் இன்றைய சில்லறைத் தலைவர்கள் ஏமாற்ற முடியாது அப்படி அவர்கள் ஏமாற்ற நினைத்தாலும் மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர் அவர்களை விரட்டி அடிப்பதற்க்கு என்றார் மஜ்லிஸ் சூறாசபை செயலாளர் வாஹிட்.

No comments:

Post a Comment