Pages

Sep 9, 2013

முஸ்லிம்-சிங்கள ஒற்றுமையை சீர்குலைக்க சில தீயசக்திகள் செயற்படுகின்றன - ஜனாதிபதி

முஸ்லிம்-சிங்கள ஒற்றுமையை சீர் குலைத்து நாட்டில் குழப்ப நிலை ஒன்றைத் தோற்றுவிக்க சில தீய சக்திகள் முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் கண்டி மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதி நிதிகளைச் சந்தித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

இன்று நாங்கள் பள்ளிகளை உடைப்பதாக சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். நாங்கள் எந்த ஒரு பள்ளியையும் உடைக்க வில்லை.

அப்படியான நோக்கமும் எமக்கு இல்லை. நான் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக இருக்கின்றேன். முஸ்லிம்களுக்கு ஏதேனும் பிரச்சினை வருமேயானால் நாங்கள் ஒரு போது அதற்கு இடமளிக்க மாட்டோம்.

நாங்கள் நாட்டில் பள்ளிகளை கட்டிக் கொடுத்துள்ளோம். இவ் உண்மையை மறைப்பதற்கு சில தீய சக்திகள் எம் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.

யுத்தம் நடைபெற்ற போது முஸ்;லிம்கள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்டனர். அச் சமயத்தில் எவரும் முஸ்லிம்களை பற்றிப் பேச வில்லை என்றார்.



No comments:

Post a Comment