ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை திருமணம் செய்ய விரும்புவதாக அமைச்சர் மேர்வின் சி்ல்வா வெளியிட்ட கருத்துக்கள் தவறானது.
அது, பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகம் என்று இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
நவநீதம்பிள்ளை தொடர்பில் முறையற்ற கருத்து வெளியிடப்பட்டமை தொடர்பில் அமைச்சர்கள் எல்லோரும் கவலை கொள்கிறோம். தாயின் வயதையெத்த ஒருவரை நோக்கி இப்படியான முறையற்ற பேச்சுக்களை பேசுவது என்றைக்குமே ஏற்றுக்கொள்ள முடியாது என்று கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சர் மேர்வின் சில்வா, நவநீதம்பிள்ளை திருமணம் செய்து இலங்கை தொடர்பில் விளக்கமளிக்க விரும்புகிறேன் என்று வெளியிட்ட கருத்து தொடர்பில் தன்னுடைய ஆழ்ந்த அதிர்ப்தியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது நவநீதம்பிள்ளை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, அவரிடம் இலங்கை அரசாங்கம் நேரடியாக மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே நவநீதம்பிள்ளை தொடர்பில் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்துக்கள் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகம்- வன்முறை என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
No comments:
Post a Comment