Pages

Sep 5, 2013

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும்: முஜிபூர்

இலங்கையிலுள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் செயற்பாட்டினை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று

ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினரான முஜிபூர் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டிலுள்ள முஸ்லிம்களை அச்சுறுத்தலானவர்களாக சித்தரித்து தீவிரவாத சாயம் பூச முயல்கின்றனர். அதன் அதியுச்ச உறுதிப்பாடாகவே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கூற்றும் அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களையும்- எண்ணங்களையும் விதைப்பதை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பண உதவி கிடைப்பதாக சித்தரித்துள்ள பாதுகாப்பு செயலாளர், அந்த நிதிகள் தீவிரவாத சதிமுயற்சிகளுக்கு பயன்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறான கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் பெருத்த கவலையைத் தோற்றுவித்துள்ளது. எதிர்காலத்திலாவது இவ்வாறான அர்த்தமற்ற பேச்சுக்களை அவர் நிறுத்த வேண்டும் என்று முஜிபூர் ரஹ்மான் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment