Pages

Sep 6, 2013

பால்மாக்களில் நச்சுப் பதார்த்தம்; போட்டித் தன்மையும் குறுகிய மனப்பான்மையும்!

பால்மாக்களில் நச்சுப் பதார்த்தம்; போட்டித் தன்மையும் குறுகிய மனப்பான்மையும்!

சில பால்மாக்களில் நச்சுப்பதார்த்தம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியான சர்ச்சைக்குரிய செய்தி வர்ததக பாரம்பரியத்தை கேள்விக்குறியாக்கவும் தவறவில்லை.

உற்பத்தியாளர்கள் தமது பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும்போது அவற்றின் இயல்பு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கான உரிமை உள்ளது.

இருப்பினும் உற்பத்தியாளர்கள் தமது பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை அதிகரிப்பதற்காக சந்தையில் போட்டித்தன்மை மிக்க பொருட்கள் குறித்து தவறான கருத்துக்களை மக்களிடையே பரவச் செய்யும் நடவடிக்கை போட்டியாளர்களை விட நுகர்வோருக்கு இழைக்கின்ற துரோகமாகவே கருதப்படுகின்றது.

பரிசோதனைகள், கண்காணிப்புகள், தீர்மானங்கள் எனும் நடைமுறைகளைப் பின்பற்றுவதை விடுத்து தேசிய அடையாளம் என்ற போர்வையில் மக்கள் மனங்களில் இடம்பிடித்திருந்த பால்மா வகைகள் தொடர்பில் மாயையை தோற்றுவிப்பதற்கு சிலர் மேற்கொண்ட பிரயத்தனங்களின் உண்மைத் தன்மை காலப்போக்கில் வெளிப்பட்டது.

குறுகிய மனப்பான்மையுடைய சிலர் முன்னெடுத்த முயற்சிகள் நாட்டில் பால்மா தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதுடன் மக்களையும் சிரமத்தில் ஆழ்த்தியது.

No comments:

Post a Comment