
இவ்வாறு வடமேல் மாகாண சபைத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் சத்தாரை ஆதரித்து நிக்கவெரட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பவுஸ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை வீதி அபிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய மின்சாரம், வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸின் பிரதி கொள்கைப்பரப்புச் செயலாளரும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.உவைஸ் வேட்பாளர் சத்தார் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு அமைச்சர் பௌசி தொடர்ந்து உரையாற்றுகையில்,
தற்போதய ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் கடந்த முப்பது வருடகாலமாக புரையோடிக்கிடந்த கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளமை மட்டுமல்லாது அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்த கிராம மக்களும் நகர பிரதேசங்களில் உள்ள மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புக்களைப் போன்று கிராமங்களிலும் பெரும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டடு வருகின்றார்.
பல்லின சமூகங்கள் வாழ்ந்து வரும் இந்த நாட்டில் பிரச்சினைகள் தோன்றுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது. அதனை முஸ்லிம் மக்கள் குறிப்பாக முஸ்லிம் தலைமைத்துவங்கள் புத்திசாதுர்யத்துடன் கையாண்டு தீர்த்துக் கொள்வதற்கு முனைய வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் இன்று மக்களை பிழையானதும், ஆபத்தானதுமான ஒரு சூழ்நிலை;குள் தள்ளிவிடும் நிலைக்கு இட்டுச் செல்கின்றது. சுயநல அரசியல் இலாபங்களுக்காக இனவாதங்களை உணர்ச்சி வசப்படுத்தி பேசி மக்களை தவறான வழிக்கு இட்டுச் செல்கின்றது.
மேலும் இவர்களின் மற்றுமொரு சுயநலமாகவே முஸ்லிம் தலைமைத்துவங்கள் உருவாகுவதை தடுத்து நிறுத்தும் வகையிலான குள்ளத்தன கைங்கரியங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் ஒன்று வரும் போது மட்டும் வாக்குகளைப் பெறும் நோக்கில் முஸ்லிம்களின் பள்ளி உடைப்பு என்ற ஒரு விடத்தை தேர்தல் பிரச்சாரமாக கையாழும் ஒரு யுக்தியை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது. இதனை இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், அரசியல் ஆய்வாளர்களர்களினால் கேலிக்கூத்தான ஒரு செயற்பாடாகவே விமர்சனம் செய்யப்படுட்டு வருவது முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் வெட்கப்படவேண்டி உள்ளது.
இந்த நாட்டின் வரலாற்றிலே பள்ளி வாசல் கட்டுவதற்காக கோடிக்கணக்கான ரூபாக்களை ஒதுக்கீடு செய்து அதனை செய்து காட்டிய பெருமை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே சாரும். காலத்தின் தேவைக்கு அமைய பாதை அபிவிருத்தி, நகரமயமாக்கள் திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளும் போது பள்ளி வாசல்கள், கோவில்கள், பன்சலைகள், பாடசாலைகள், வீடுகள் போன்றனவற்றுக்கு பாதிப்பு ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது. இதனை அற்ப விடயங்களுக்காக பூதாகரமாக்கிக் கொள்ளக் கூடாது.
இன்று மு.கா. தலைவர் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் அத்தனை சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டு மக்களை மட்டும் அரசாங்கத்தின் எதிரியாக காட்ட முட்பட்டுவருவதனையிட்டு மக்கள் மிகவும் நிதானமாக சிந்தித்து செயற்படவேண்டும்.
எனவே ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டு வரும் சமாதான நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் மக்கள் பக்கபலமாக இருகின்றனர் என்ற செய்தியை அறியச் செய்வதற்கு நடைபெறவுள்ள இம்மாகாண சபைத்தேர்தல் சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமையப் போகின்றது.
குருநாகல் மாவட்டத்தில் அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடும் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளராக அப்துல் சத்தார் நிறுத்தப்பட்டுள்ளார். இம்மாவட்டதில் சுமார் ஒரு இலட்சத்து 34000 வாக்குகள் இருக்கின்றன. இதன் மூலம் நாம் ஒரு பிரதிநிதியாவதை கிடைக்கப்பெறச் செய்யாமல் விடுவோமாயின் எம்மைவிட நஷ்டவாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.
நிறுத்தப்பட்டள்ள வேட்பாளர் சத்தாரை இம்மகாண சரபத்தேர்தலில் வெற்றி பெறச் செய்வதன் மூலம் குருநாகல் மாவட்டதிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களின் அத்தனை துறைகளை அபிவிருத்தி அடையச் செய்ய முடியும்.
எமது தனிப்பட்ட குரோதங்கள், சுயநலன்கள், கட்சிகளை வைத்துக் கொண்டு செயற்படுவோமாயின் அது எமது பின்சந்ததியினருக்கு நாம் செய்யும் பெரும் துரோகமாகவே அமையும் என்றார்.
No comments:
Post a Comment