Pages

Sep 20, 2013

யாழில் இன்று காலை உதயனின் பெயரில் போலி பத்திரிக்கை

தேர்தல் தினமான இன்று உதயன் பத்திரிகையின் பிந்திய பதிப்பு என அச்சிடப்பட்டு போலி பத்திரிக்கை யாழ்ப்பாணத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் அனந்தி அரசுடன் இணைந்தார் எனவும் தேர்தலை தமிழரசுக் கட்சி புறக்கணிக்கின்றது என்ற செய்தியுடனும் யாழில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிக்கையின் பெயரில் போலியான பிரசுரமொன்று யாழ்ப்பாணத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி போலி பத்திரிக்கையானது யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று காலை விநியோகிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment