கே.ஏ.பாயிஸ் முகநூல் ஊடாக
புத்தளம் நகர பிதாவும், ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் நேற்று புத்தளத்திற்கு வருகை தந்த நமது நாட்டின் அதிமேதகு ஜனாதிமதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெரிய பள்ளிக்கும் விஜயம் செய்தார்.
கண்டியை ஆட்சிசெய்த இறுதி சிங்கள மன்னனான ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கனுக்குப் பின்னர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த எமது நாட்டின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விளங்குகிறார்.
புத்தளம் பெரிய பள்ளிக்கு 1720 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் வருகை தந்து , புத்தளம் மக்கள் செய்த சங்கைக்காக தனது உத்தியோக பூர்வக் கொடி, வெண் சாமரைகள் இரண்டு, 18 வெள்ளிக் குஞ்சங்கள், பாரிய ஊது குழல் ஒன்று ஆலவட்டங்கள்,கொடிகள், காழா விளக்கு எனப்படும் பூமணி விளக்குகள் போன்றனவற்றை பள்ளிக்கு அன்பளிப்பு செய்தான். ஜனாதிபதியவர்கள் தமது விஜயத்தின் போது இவற்றைப் பார்வையிட்டதுடன் கட்டிடக் கலையம்சம் வாய்ந்த பள்ளியையும் பார்வையிட்டார்.
எதிர்வரும் 21 ம் திகதி சனிக்கிழமையன்று தனது 75 வருடத்தை பூர்த்தி செய்யவிருக்கும் இப்பள்ளிவாசலுக்கு ஜனாதிபதி வருகை தந்தது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த நிகழ்வாகக் கருதப்படுகின்றது.
மேலும் புத்தளம் உலமாக்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள், மற்றும் பொது மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றும் புத்தளம் நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்ககணக்கான மக்கள் கூடியிருந்த இப்பெருங் கூட்டத்தில் அதிமேதகு ஜனாதிபதி தமிழில் உரையாற்றியது வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது.
இவ்வளவு காலமும் முஸ்லிம்கள் ஜனாதிபதி மீதும் ஜனாதிபதி முஸ்லிம்கள் மீதும் வைத்திருந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டு ஜனாதிபதி - முஸ்லிம் உறவுக்கு புதிய பாலம் இடப்பட்டதாக இவ்விஜயம் அமைந்திருக்கிறது
No comments:
Post a Comment