Pages

Sep 7, 2013

மத்திய கிழக்கு நாடுகளில் போன்று இலங்கையிலும் எழுச்சி - ஜனாதிபதி

நாட்டில் ஒரு எழுச்சியையும் இன மற்றும் மத அடிப்படையிலான வேறுபாடுகளை மக்கள் மத்தியில் உருவாக்கி நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். மாத்தளையில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கு நாடுகளில் தொலைபேசி குறுஞ் செய்திகளை அனுப்பி, வீதிகளில் போராட்டங்களை நடத்தி, இளைஞர்களை தூண்டி விட்டு, மோதல்களை உருவாக்கி அந்நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டன. இப்படியான குற்றச்சாட்டுகளும், கோரிக்கைகளும் மத்திய கிழக்கு நாடுகளின் அரசாங்கங்களை தூக்கியெறிய உருவாக்கப்பட்டன.

முஸ்லிம்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது சியா , சுன்னாஹ் மோதல் ஏற்பட்டது . ஈராக், லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் அந்நாடுகளில் இன்னும் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை.

இலங்கை மக்கள் மத்தியிலும் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை உருவாக்கி பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் பொய் பிரசாரங்களை நப்பக் கூடாது என்றார்.

No comments:

Post a Comment