Pages

Sep 12, 2013

கல்முனை மாநகர முதல்வர் ஈரான் நாட்டு தூதுவருடன் கலந்துரையாடினார்

(ஆசாத்)
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் டாக்டர். முகம்மட் நபி ஹசானி போரை நேற்று (11.09.2013) தூதரக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

கல்முனை மாநகர முதல்வரின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தின் அம்சமாக கிளக்கின் வியாபார கேந்திர மையமாக காணப்படும் கல்முனையினை மறைந்த மாபெரும் தலைவர் கண்ட கனவை நனவாக்கும் வகையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதாகும். அந்தவகையில் தன்னால் முடிந்த முயற்சிகளை கல்முனை மாநகர முதல்வர் மேற்கொண்டு வருகின்றார்.

இதற்கமைவாக இச்சந்திப்பின்போது கல்முனை அபிவிருத்தி உள்ளிட்ட இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment