Pages

Aug 29, 2013

நவநீதம்பிள்ளையின் வருகைக்கும் ஜனாதிபதியின் பயணத்திற்கும் தொடர்பில்லை

நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கும் ஜனாதிபதியின் பெலாரஸ் விஜயத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடை யாது. வெளிநாட்டு தலைவர்கள் யாராவது இலங்கை வருவதற்காக ஜனாதிபதியின் சர்வதேச மட்ட பணிகளை பின்போட முடியாதென சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரித்தார்.

நவநீதம் பிள்ளை இலங்கை வருவதால் ஜனாதிபதி வெளிநாடு சென்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதியின் பெலாரஸ் விஜயம் தொடர்பில் பத்திரிகைகள் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டிருந்தன. ¡ராவது தலைவர் இங்கு வருவதற்காக ஜனாதிபதி அலரி மாளிகையில் இருக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஜனாதிபதியின் அறிவித்தல்படியே நவநீதம்பிள்ளை இங்கு வந்துள்ளார். அவரை சந்திக்கவும் பிள்ளைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment