Pages

Aug 29, 2013

இலங்கை சகோதரரின் செயலை பாராட்டிய கத்தார் பாதுகாப்பு தலைமை செயலகம்..

செவ்வாய்க்கிழமை (27.08.2013) கத்தாரில் வாகனம் நிறுத்தும் தொகுதியொன்றில் இருந்து தவற விடப்பட்ட கத்தார் ரியால் 90,000/- பணத்தை இலங்கை நாட்டைச் சேர்ந்த முஹம்மட் நிப்ராஸ் என்பவரால் கண்டெடுக்கப் பட்டது.

இப்பணத்தை கண்டெடுத்த சகோதரர் நிப்ராஸ் அவ்விடத்தில் இருக்கும் காவலாளியூடாக கத்தார் போலீஸ் இடம் ஒப்படைத்தார்.

கத்தார் நாட்டின் பாதுகாப்பு திணைக்களத்தின் Brigadier Nasser Jabr Al-Nuaimi அவர்கள் இவரின் இந்த நல்ல செயலை பாராட்டியதுடன், கத்தார் தலைமை பாதுகாப்பு திணைக்களத்தின் இணையத்தளத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை ரூபா சுமார் 32 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை கண்டெடுத்து இஸ்லாம் அனுமதித்த முறையில் உரிய இடத்தில் ஒப்படைத்த இலங்கையை சேர்ந்த சகோதரர் முஹம்மட் நிப்ராஸ் க்கு எமது NEWSLINEINFO  இணையத்தளம் சார்பாக எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

2 comments:

  1. I really appreciate But Brigadier you have to give some money for him then every body will have a chance to do same









    ReplyDelete
  2. A real muslim always expect return from Allah only for his good deeds.

    ReplyDelete