Pages

Aug 23, 2013

ஓட்டமாவடி சிறுவன் கொலை! சந்தேக நபர் கைது (படங்கள் இணைப்பு)

ஓட்டமாவடியில் கடந்த 17ம் திகதியிலிருந்து காணமல்போய் நேற்று பிற்பகல் 04.00 மணியளவில் ஓட்டமாவடி, மடுவத்து வீதியில் சாக்கடையிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக சிறுவனின் கொலையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபரொருவரை மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், இவருடன் நெருங்கிப்பழகி வந்ததாகவும் காணாமல் போவதற்கு முதல் தினம் குறித்த சந்தேக நபருடன் கொல்லப்பட்ட சிறுவன் காணப்பட்டதாகவும் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீராவோடை சந்தையை அண்மித்த பகுதியிலுள்ள உறவினரின் வீடொன்றில் ஒழிந்திருந்த போதே நேற்றிரவு 11.00 மணியளவில் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதே நேரத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் சலடம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இது வரை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

குறித்த சிறுவன் செம்மண்ணோடை, பாடசாலை வீதியைச் சேர்ந்த விசேட தேவையுடைய மீறா லெப்பை முஹம்மட் ஹிமாஸ் (வயது� 11) என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




No comments:

Post a Comment