Pages

Aug 17, 2013

கிண்ணியா கங்கை ஆற்றில் நீராடிய சிறுவர்கள் மூவரை காணவில்லை

கிண்ணியா, கங்கை ஆற்றில் நீராடி கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். 

கிண்ணியா பைஸல் நகரைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க, ஜூனைதீன் முகமட் இஜாஸ், ஜமால்தீன் ரவூப் ரொஷான், அப்துல் மனாப் பர்ரீதுல்லா இம்ரான் ஆகியோரே இவ்வாறு காணமால் போயுள்ளனர்.

இவர்கள், இன்று காலை உணவை உண்டுவிட்டு கங்கையாற்றிற்கு குளிக்கச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சிறுவர்களை தேடும் பணியில் கிண்ணியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


MOBILE NEWS: -
@newslineinfo
 'Kenkai' Paalathil kulikkach sendra Faizal Nahar'ai serntha
3 peaneeril adiththuch sellap pattullathaaha thahaval.

More> newslineinfo.tk

No comments:

Post a Comment