சவூதியில் இலங்கை பணிப் பெண் ஒருவரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து சித்திரவதை செய்ததாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என சவூதி அரேபிய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் வேலைசெய்யும் இலங்கை பணிப்பெண்ணான நிலங்கெதர தயாரத்ன என்ற பெண், தன்னை வீட்டு எஜமானி குளிர்சாதனப் பெட்டிக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்து கொலை செய்ய முயற்சிப்பதாக இலங்கையில் உள்ள தனது கணவருக்கு தொலைபேசி மூலம் அறிவித்திருந்தாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் இச்செய்தி தொடர்பில் மறுப்பு தெரிவித்துள்ள சவூதி அரேபிய தூதரகம்,
இச் செய்தியானது உண்மைக்கு புறம்பானது. குறித்தப் பெண்ணின் உடலில் எரிகாயங்கள் காணப்பட்டது. அனால் அவர் ஆரோக்கியமாக இருக்கின்றார் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment