Pages

Aug 29, 2013

நவிபிள்ளையின் விஜயம் இலங்கைக்கு கிடைத்த பெரிய வெற்றி

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை தமக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று இலங்கை அரசாங்கம் அறிவி்த்துள்ளது.

இலங்கை தொடர்பாக சர்வதேச ரீதியில் தவறாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் மூலம் தீர்வு கிடைக்கும். ஏனெனில், குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர்கள் உண்மையை நேரில் கண்டறியும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கை தொடர்பாக சரியான முடிவை எடுப்பார்கள் என்றும் அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வா மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

இலங்கைக்கு மனித உரிமைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் நவநீதம்பிள்ளை விஜயம் செய்துள்ளார். அவர் தன்னுடைய கண்களாலேயே உண்மைகளை அறிந்து கொள்வார். அது சிறந்தது. ஆனால், அவரால் அரசாங்கத்துக்கு எந்தவித அழுத்தங்களையும் வழங்க முடியாது. இலங்கை இறமையுள்ள சுயாதீனமான நாடு என்று அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment