Pages

Aug 17, 2013

700 இற்கு மேற்பட்டோர் பயணித்த கப்பல் மூழ்கியது; 17 பேர் பலி

பிலிப்பைன்ஸில் 700 இற்கு மேற்பட்ட பயணிகள் கப்பலொன்று, சரக்குக் கப்பலொன்றுடன் மோதியதால் கடலில் மூழ்கியுள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கப்பலிலிருந்த 690 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என பிலிப்பைன்ஸ் கடற்படை அதிகாரியான ரியர் அட்மிரல் லூயிஸ் டோஸன்கூறியுள்ளார். எனினும் 575 பேர் மாத்திரமே கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என அப்பகுதியிலுள்ள கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நேரப்படி நேற்றிரவு 9.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுல்பிசியோ 7 எனும் உள்ளூர் சரக்குக் கப்பலொன்றும் சென் தோமஸ் ஒவ் அகுய்னஸ் எனும் பயணிகள் கப்பலொன்றுமே ஒன்றுடனொன்று மோதியுள்ளன. 

சென் தோமஸ் கப்பல் மின்டனோவா பகுதியிலிருந்து தலைநகர் மணிலாவை நோக்கி சென்றுகொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. கரையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இக்கப்பல் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தையடுத்து கப்பல் பயணிகளும் ஊழியர்களும் கடலில் குதித்ததாகவும் ஆனால் அப்பகுதி இருளாக இருந்ததால் மேலும் மனிதர்களை அடையாளம் காண்பது இருந்ததாகவும் பிலிப்பைன்ஸ் கடற்படை அதிகாரியொருவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment