இன்று அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் மினி பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி முகாமையாளர்களுக்கான செயலமர்வொன்றை முடித்து விட்டு நேற்றிரவு மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த போது இவர்கள் பயணித்த தனியார் மினி பஸ் வண்டி இன்று அதிகாலை 3 மணியளவில் மன்னம்பிட்டியில் வைத்து மரமொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பயணித்த 21 சமுர்த்தி முகாமையாளர்களில் மூன்று சமுர்த்தி முகாமையாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் பஸ்வண்டியின் சாரதி நடாத்துனர் அடங்களாக 20 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மன்னம்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மன்னம்பிட்டி மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிலருக்கு சிறிய காயங்கள் எனவும் சிலருக்கு படுகாயங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment