Pages

Jul 16, 2013

சிசுவை விற்க முயற்சி: தாய் உட்பட அறுவருக்கு பிணை

 
கண்டி பன்விலை அரத்தன பிரதேசத்தை சேர்ந்த 18 நாட்களேயான சிசுவை விற்பனை செய்வதற்கு முயற்சித்த சிசுவின் பெற்றோர் உட்பட ஆறுபேரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

18 நாட்களேயான சிசுவை பணத்திற்கு விற்பனை செய்ததாக கூறப்படும் சிசுவின் தாய், சிசுவின் தந்தை, அச்சிசுவை வாங்குவதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் குழந்தையை விற்பனை செய்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் மடுல்கலே வைத்திய சாலையின் பெண் ஊழியர் ஒருவர் மற்றும் அவரது கணவன் ஆகியோரையே பன்விலை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் தெல்தெனிய நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர் செய்தபோது அவர்களை தலா ஐம்பது ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலைச்செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.TM

No comments:

Post a Comment