Pages

Jul 17, 2013

பஸ்ஸில் ஏற்றிவந்த சட்ட விரோத சிகரட்டுக்கள் கல்முனையில் கைப்பற்றப்பட்டுள்ளது

கொழும்பில் இருந்து பயணிகள் பஸ்ஸில் கல்முனைக்கு கொண்டவரப்பட்ட ஒரு தொகை சட்ட விரோத சிகரட்டுகள் கல்முனை பொலிசாரினால் கைப்பற்றப் பட்டுள்ளது.

இன்று(17) புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கல்முனை பிரதான வீதியிலுள்ள தேநீர் கடை ஒன்றின் அருகே பஸ்ஸில் கொண்டுவரப்பட்ட பொதிகளை இறக்குகின்ற போதே பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்டு இந்த சட்ட விரோத சிகரட் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சம்மாந்துறைக்கு பயணிகளை ஏற்றி செல்லும் போதே இந்த சம்பவம் கல்முனையில் இடம் பெற்றுள்ளது . சம்மாந்துறைக்கு செல்ல வேண்டிய பயணிகளை கல்முனையில் இறக்கி விட்டு பொலிசார் பொலிஸ் நிலையத்துக்கு பஸ்ஸை எடுத்து சென்று விட்டனர். 

இதனால் கொழும்பில் இருந்து வந்த பயணிகள் செய்வதறியாது தெருவோரத்தில் நின்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.

பஸ்சுடன் கைப்பற்றப்பட்ட சட்ட விரோத சிகரட்டும் ,சாரதியும் கல்முனை
பொலிசில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதுடன் இது சம்மந்தமான
மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment