M.B.MOHAMED SUFYAN, BA (HONS)(SOCIOLOGY),
LLB (READING)
சமூகம் என்பது பல்வகைப்பட்ட கட்டமைப்பின் வெளிப்பாடாகும் இச் சமூக அமைப்பினை ஆராய்வதே சமூகவியலின் நோக்கமாகும். சமூகப்பிரச்சினைகள் எனப்படுவது சமூகவியலின் தோற்றத்துடனேயே தலைப்படத் தொடங்கியது. சிறுவர் துஷ்பிரயோகம்;, போதைப்பொருள்பாவனை, வறுமை, வேலையில்லாப்பிரச்சினை, தற்கொலை, சீதனம், பிச்சையெடுத்தல் விபச்சாரம் ஆகியவை முக்கியமான சமூகப்பிரச்சினைகளாகக்; காணப்படுவதுடன் இவை சமூகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதனால் சமூகத்தின் ஒழுக்கமும் சீர்குலைகின்றது.
அந்தவகையில் சமூகப்பிரச்சினைகளில் ஒன்றாக கருதப்படும் விபச்சாரம் என்பதை எடுத்து நோக்கும்போது, பாலியத்தொழில்களின் கிளைகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.“Prostitution” என ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.
விபச்சாரம் "Prostitute" என்ற இலத்தின் மொழிச் சொல்லிருந்து மருவி வந்ததாகும். pfront,
forward ன்ற சொற்களால் இதற்கு அர்த்தம் கொடுக்கப்படுகிறது. உலகில் பழமையான தொழில்களாகவுள்ள விபச்சாரம் பல்வேறு வடிவங்களுடனும், பலவிதமான சட்டரீதியான தன்மைகளை கொண்டதாகவும் நாட்டுக்கு நாடு வேறுபட்டுகாணப்படுகிறது. இதற்கான வரலாற்றுச்சுவடுகளை ரோம், கிரீஸ், பிரான்ஸ், ஈரான், ஈராக், ஜப்பான் முதலிய நாடுகளில் அவதானிக்ககூடியதாகவுள்ளது.
உலகில் விபாச்சார தொழில் மூலம் கிடைக்கும் வருவாய் ஆண்டொன்றுக்கு நூறு பில்லியன் அமெரிக்க டொலர் எனக் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக கட்டணம் செலுத்தி பாலியல் சேவையினை வழங்குவது விபச்சாரம் எனப்படும். இதில் கட்டணம பெறுபவர் (Prostitute) என்றும், சேவையினை பெறுபவர் (Jogn) என்றும் அழைக்கப்படுகி;னறனர். இவ்விபச்சாரம் தொடர்பாக பின்வரும் அடிப்படையில் விளங்கிக்கொள்ளமுடியும்.
விபச்சாரம் தொடர்பான வரைவிலக்கணங்கள்:
'விபச்சாரம் என்றால் என்ன' இதனை வரையறை செய்ய வந்த அறிஞர்களிடையே கருத்தொருமைப்பாடு நிலவவில்லை. ஒவ்வொரு அறிஞர்களும் தாம் வாழ்ந்த கால சூழ்நிலைக்கு ஏற்பவும் தம் அறிவுக்கு எட்டிய வகையிலும் கருத்துகளை முன்வைக்கத் தொடங்கினர்.
இந்த வகையில் ஹென்றி பென்ஜமின் எனும் அறிஞர் 'ஒரு பெண் கணவன் இல்லாத நிலையில் அவளது விருப்பத்துடன் பணத்தினை பெற்றுக்கொண்டு ஏனையோருடன் உறவுகொள்ளும் செயற்பாடே விபச்சாரமாகும்' என்கின்றார்.
மேலும் ஒவீயலோ என்ற அறிஞர் 'உடலினை வழங்கக்கூடியதும் பெறக்கூடியதுமான நடவடிக்கையினை' விபச்சாரம் என வரையறை செய்கிறார்.
என்ற அமைப்பானது விபச்சாரத்தினை வரைவிலக்கணப்படுத்தும்போது, 'குழந்தைகள், பெண்களை உட்படுத்தி பாலியல் சுரண்டனை மேற்கொள்கின்ற தொழிப்பாடாகும்' எனக்கூறுகின்றது.
எனவே கணவன் மனைவி தவிர்ந்த ஏனையோர் உடலில் பாலியல் சேவையினைக் கொடுக்கும் அல்லது பெறுகின்ற நடவடிக்கையாகவும், பாலுறவுஇ உடலியல், தொடர்பு பாற்புணர்ச்சி, பாலியல் ஆசை முதலியவற்றை வாடகைக்கு வழங்கும் நடவடிக்கை மூலமாக பாலியல் திருப்தியினை பெற்றுக்கொள்ளும் செயற்பாடாகவும் விபச்சாரத்தினை வரைவிலக்கணப்படுத்த முடியும். இவை யாவற்றையும் பொதுமைப்படுத்தி நோக்கும்போது, 'வெகுமதியுடன் கூடிய அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாலியல் சேவையினை வழங்குகின்ற அல்லது பெறுகின்ற செயற்பாட்டுடன் கூடிய நடவடிக்கையாக விபச்சாரம்' எனக் கொள்ளமுடியும்.
விபச்சாரத்தின் வகைகள்
விபச்சாரமானது அதன் தன்மை, இயல்பு, செயற்படும் விதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பலவிதமாக வகைப்படுத்தப்படுகிறது. பொதுவாக அதன் வெளிப்படைத்தன்;மையின் அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.
1) நேரடியான வடிவம்
(2) நேரடியற்ற வடிவம்
Direct forms
விபச்சாரம் வெளிப்படையாகவே எல்லோருக்கும் தெரியக்கூடியதாக நடைபெற்றால் அது நேரடியான வடிவம் என அடையாளப்படுத்தப்படும் அத்தகைய நேரடி செயற்பாடுகளாக பின்வருவனவற்றை சுட்டிக்காட்ட முடியும்.
Street: ஆடவரைக் கவரும் வண்ணம் ஆடை அணிந்து கொண்டு பெண்கள் சாலையோரம் நின்று வாடிக்கையாளரை அழைக்கும் முறைமையாகும். இது சந்துபொந்து, வாடகை அறைகள், கார் என்பவற்றில் பகுதிநேரமாகவோ, முழு நேரமாகவோ நடைபெறும். சமீபத்தில் இம்முறை குறைந்த வருவதை அவதானிக்கலாம். நுப:-முன்னாள் சோவியத் ரஷ்யா இதில் முன்னணி வகிக்கிறது.
Brothel: வெளிப்படையாகவே பாலியல் சேவை நடைபெறுவதற்கென இடங்கள் ஒதுக்கப்படுவதாகும். இதை சிலர் தாசிவீடு அல்லது வேசிவீடு என அழைப்பர். விபச்சாரம் நடத்துவதற்கான அங்கிகாரம் பெற்றிருப்பதுடன், பெயர்ப்பலகையும் வெளிப்படையாக இடப்பட்டிருக்கும். Eg:- Red Light Areas
Escorts: Call Girl அல்லது Escort Agencyல மூலமாக இடம்பெறுவதாகும். இதற்காக வாடிக்கையாளர்கள் ஹோட்டல் ஊழியர்கள், தொலைபேசி, முச்சக்கர வண்டி சாரதிகள், இணையத்தளம், பத்திரிகைகள் மூலமாக அழைப்பு விடுக்கப்படுவர். ஒப்பீட்டு ரீதியில் விலை உயர்ந்ததும், சொகுசானதுமான ஒன்றாகக் காணப்படுகின்றது.
Eg:- ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக இடம்பெறுகிறது.
Private: இது Escortஅழைப்பவரை நாடி குறித்த பெண் செல்வதாகும்.
Window and Doorway : விபச்சார விடுதிகள் வெளிப்படையாக திறந்து இருக்கின்ற முறைமையாகும் இதற்கான கேள்வி சூடான பிரதேசங்களில் அதிகமாக இருப்பதால் கூடுதலாக உள்ளது.
Sex Tourism and Child sex tourism: சுற்றுலாவில் ஈடுபடும் வணிகர்களை திருப்திபடுத்துவதே இதன் நோக்கமாகும். (The World Tourism Organization,Special Agency Of
United Nation)என்பன பாலியல் சுற்றுலாவினை ஏற்பாடு செய்கின்றன. இதற்காக பெருமளவு சிறுவர்கள், பெண்கள் போன்றோர் பயன்படுத்தப்படுகின்றனர். Eg: தாய்லாந்து, கம்போடியா, இந்தியா, பிரேசில், மெக்ஸிக்கோ போன்ற நாடுகளில் அதிகம் இடம்பெறுகின்றது.
Club, Pub, Bar, Karoake, Dance Hall இவ்விடங்களில் மதுபாவனையுடன் கூடிய பாலியல் சேவையும் வழங்கப்படும்.
Indirect Forms
பாலியல் சேவை மறைமுகமாகவோ, முகவர் மூலமாகவோ, சட்டரீதியற்ற முறையிலோ நடைபெறுவது நேரடியற்ற வடிவத்தில் உள்ளடங்கும். அவற்றினைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடமுடியும்.
Lot lizart: Street இன் வேறுபட்ட தன்மையாகும். நிறுத்தப்படாத வாகனங்களில் நடமாடும் சேவையாக நடைபெறும். இதில் முக்கிய பங்காளராக சாரதி காணப்படுவார்.
Bondage and Descripline: கொச்சை வார்த்தை, கெட்ட பேச்சு, இருபெருளைத் தரக்கூடிய சொற்பாவனை என்பவற்றைக் கெண்ட வாய்வார்த்தைகள் மூலம் பாலியல் நடவடிக்கையினைத் தூண்டும் முறையினை இது குறிப்பிடுகின்றது.
Lap Dancing: இதில் வெளிப்படையாக பாலியல் தொடர்பு காணப்படமாட்டாது. ஆனால் நடைபெறுகின்ற நாட்டியம், நடனம், இசை முதலியவற்றில் பாலியலினைத் தூண்டும் அம்சம் காணப்படும்.
Massage parlour: மசாஜ் செய்வாற்காக வேண்டி அமைக்கப்பட்டாலும் அங்கு சிறிதளவாகவோ அல்லது மறைமுகமாகவோ பாலியல்ச் சேவை கொடுக்கப்படும் இடமாகும். உதாரணமாக: ஆண்களிற்கு மசாஜ் செய்வதற்கு பெண்களினை உபயோகித்தல்.
Travelling Entertainments: நடிகர்கள் நடனக் கலைஞர்களை உட்படுத்தி மறைமுகமாக மேற்கௌ;ளப்படும் பொழுதுபோக்குடன் கூடியதொரு வர்த்தகத்தினை இதுகுறிக்கும்.
Beer Girls: Beer இனது விற்பனையைக் கூட்டுவதற்காக வேண்டி இளம் நங்கையரை உள்வாங்கி Beer இனை விநியோகம் செய்யும் நடவடிக்கையாகும்.
Street wenders and Traders: கிராமிய மட்டங்களில் அவர்களால் வடிவமைக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும்போது இளம் பெண்களை முன்னிறுத்தி விற்பனையில் ஈடுபடுகின்ற செயற்பாடாகும். கிராம உற்பத்திகளைக் கூட்டுவதே இதன் பிரதான நோக்கமாகும்.
இவ்வாறாக விவச்சாரமானது அதன் வெளிப்படைத் தன்மையைப் பொறுத்து Direct forms, Indirect forms என இரண்டாக வகைப்படுகின்றது. இவ்வகைப்பாட்டினுள்ளே இன்று உலகில் பரவலாக நடைபெறும் Street
prostitute, Lot lizard, Brothel, Escort, sex tourism ஆகிய முக்கிய வழிமுறைகள் உள்ளடங்குகின்றன. இதனால் பல ஆய்வாளர்களிடையே பொதுவான வகைப்பாடாக Direct forms, Indirect forms ஏற்றுக்கொள்ளப்படுவதனை அவதானிக்க முடியும்.
விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கான காரணங்கள்
விபச்சாரத்தில் ஈடுபடுவோரினை நோக்கும்போது, அவர்களது தேவை, விருப்பம் என்பன நிறைவு செய்யப்படாத போதே இதில் ஈடுபடுகின்றனர். இந்தவகையில் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கான காரணங்களாக பின்வரும் அம்சங்களைக் கூறமுடியும்.
* வறுமை: அதாவது குடும்பத்தில் அடிப்படைத் தேவைகளினைக்கூட பூர்த்தி செய்யமுடியாத நிலையில் வாழ்வாதாரத்திற்காகவேண்டி இதில் ஈடுபடல்.
* அனாதரவற்ற தன்மை: விபத்து, இயற்கை அழிவு, சடுதியான மரணம் ஏற்படும்போது தம் உறவுகளை இழப்பதால் அவர்கள் வேறு போக்கிடமற்று சிலவேளை கடத்தப்பட்டு விபச்சாரத்தில் உள்நுழைக்கப்படுகின்றனர்.
* ஊடக ரீதியான தூண்டுதல்: ஊடகங்களின் தாக்கத்தால் மக்களது உணர்வுநிலை தூண்டப்பட்டு இதன்பால் விருப்புடையோராக மாறல்.
* உயர்மட்ட உறவுகளைப் பேணல்: இராஜாங்க ரீதியிலான சந்திப்புக்கள் இடம்பெறுகின்ற வேளை அவர்களைத் திருப்திப்படுத்த அரசமட்டத்தினூடாகவே இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
* கணவன் மனைவியிடையிலான பிரிவும் உறவு முறிவடைதலும்: இராணுவத்தினர் மற்றும் வெளிநாட்டில் வேலை பார்ப்போர் தம் குடும்பங்களைவிட்டு பிரிந்திருப்பதால் அவர்களது பாலியல் தேவையைப் பூர்த்திசெய்ய விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இதேபோல விவாக முறிவுபெற்றோரும் தகாத உறவுகளை மேற்கௌ;கின்றனர்.
* விபச்சார பரம்பரையில் பிறத்தல்: விபச்சாரி குழந்தை பிரசவிக்கும்போது அக் குழந்தையை சமூகம் ஒதுக்குவதால் வேறு போக்கிடமற்று அக்குழந்தை அத்தொழிலை மேற்கொள்கிறது.
* குடும்பச் சுமை: அதிக வருமானமீட்டும் ஒன்றாக இது உள்ளதால் கடன் தொல்லை சீதனம் வீடுகட்ட குடும்ப பொறுப்புடையோர் விபச்சாரத்தை தேர்ந்தெடுகின்றனர்.
திருநங்கை அரவாணியாக மாற்றமுறல்: பால்நிலை மாற்றம் பெற்றோரை சமூகம் அங்கிகாரம் செய்யாததாலும் குடும்பத்தினால் இவர்கள் ஒதுக்கப்படுவதாலும் இவ்வரவாணிகள் தம்மாலும் பாலியலச்சேவை வழங்கமுடியும் என நிரூபிப்பதற்காக வேண்டி விபச்சாரிகளாக மாறுகின்றனர்.
இத்தகைய முக்கிய அம்சங்களின் பொருட்டாலேயே சமூகத்தில் விபச்சாரம் தளிர்விடத்தொடங்குகிறது.
உலகத்தில் விபச்சாரத்தின் நிலைப்பாடு
உலக வரலாற்றில் அனேக நாடுகளில் விபச்சாரம் ஏதோ ஒரு வகையில் பரீட்;சயமான ஒன்றாகவே உள்ளது. இவ்விபச்சாரத்தின் சட்டரீதியான தன்மையைப் பொறுத்து 3 வகைகளாக உலக நாடுகளை பிரித்து நோக்கலாம்.
1. சட்டரீதியாகவே முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிலாக கருதுகின்ற நாடுகள். உதாரணம்: ஜேர்மன்
2. விபச்சரத்தில் ஈடுபடுவதை தண்டணைக்குரிய குற்றமாக செயற்படுத்துகின்ற நாடுகள்
உதாரணம்: சவுதியரேபியா மற்றும் ஏiயை முஸ்லிம் நாடுகள்.
3. சட்ட விரோதமான அடிப்படையில் விபச்சாரம் நடைபெறும் நாடுகள்
உதாரணம்: சுவீடன், நோர்வே, அயர்லாந்து.
மேலும் உலக நாடுகளில் விபச்சார நடவடிக்கைகளினை பார்க்கும் போது இந்தியாவில் உள்ள Red Light District உலகில் விபச்சாரத் தொழிலின் மையமாக இருப்பதாக கருதப்படுகிறது. சில நாடுகளில் இளம்பெண்கள் பாலியல் சேவைக்காக வேண்டி ஏற்றுமதி செய்யப்படுகின்றனர் கம்போடிய சிறுவர்களை பாலியல் சேவைக்கு உட்படுத்தும் மோசமான நாடாக உள்ளது. அத்துடன் தாய்லாந்தானது சிறுவர் பாலியல் சுற்றுலா மையங்களை கொண்டமைந்துள்ளது.
அதேபோல் ஜப்பான், இஸ்ரேல், பெல்ஜியம், ஜேர்மன், நெதர்லாந்து, இத்தாலி, துருக்கி, அமெரிக்கா போனற் நாடுகளில் மனிதக் கடத்தல் மற்றும் பாலியல் கடத்தல்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டுகின்றது. 1.2 Million சிறுவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக இந்திய பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது. இந்திய விபச்சாரிகளுள் 40% சிறுவர்களாகும். தாய்லாந்து சுகாதார ஆய்வு மையத்தின்; கருத்துப்படி தாய்லாந்து விபச்சாரத்தில் 40% சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக கூறுகின்றது. தாய்லாந்து, பில்பைன்ஸ், இலங்கை, வியட்னாம், கம்போடியா, நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளில் ஒவ்வெரு ஆண்டும் சிறுவர்கள் கடத்தல் அனாதையாக்கப்படுதல் குடும்பத்தினரால் சேர்க்கபடுதல் மூலமாக பாலியல் வர்க்கத்தில் சேர்கப்படுகிறார்கள். எனவே உலகில் மிக வேகமாகவும், பரந்தளவிலும் காணப்படும் தொழிலாக விபச்சாரம் உள்ளது.
இலங்கையில் விபச்சாரத்தின் நிலை
விபச்சாரத்தினை தடை செய்கின்ற நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இங்கு பாலியல் சேவை சட்ட விரோதமான செயற்பாடாக கொள்ளப்படுகிறது. பொதுவாக இலங்கையில் இரண்டு நோக்கங்களுக்காக விபச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
1. பகுதி நேரத்தொழிலிலாக நடாத்தப்படல்: இது கல்லுரி மாணவர்களில் வறுமையில் வாடும் பெண்களைக்கொண்டு நடாத்தப்படுகின்றது. இதன் நோக்கம் பொருளாதார சுமையினை ஈடுசெய்வதாகும்.
2. நிர்பந்தத்தின் அடிப்படையில் இ;த்தொழிலில் ஈடுபடல் அதாவது மத்திய கிழக்கில் வேலைக்கு செல்வோர் நிர்பந்தத்தின் பொருட்டு அவர்களது உரிமையாளர், முகவர்களால் ஈடுபடுத்தப்படுதலாகும். இதற்காக வேண்டி இந்தியாவில் பல அமைப்புகள் காணப்படுவதுடன் பிரபலமான சந்தைகளிள் இப்பெண்கள் விற்கப்படுவர்.
இலங்கையில் விபச்சாரம் நடைபெறுவதற்கு இலஞ்சம், உயர் அதிகாரிகளின் சிபாரிசுஇ நாகரீக மோகம்இ இராஜாங்க ரீதியிலான உறவுஇ சுற்றுலா மையங்கள் என்பன காரணிகளாக உள்ளன. பெரும்பாலான விபச்சாரிகளாக இளம் சிங்களப்பெண்களே உள்ளனர். கூலி வேலையாட்களே இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். இலங்கையில் 40000 சிறுவர் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. அண்மைக்கால தரவுகளின்படிChild Sex Touriism மிக வேகமாகப் பரவுவதுடன் இது இலங்கையையும் விட்டுவைக்கவில்லை Unicef, ILOகணிப்பீட்டின்படி 5000-30000 பேர் ஆண்கள் பாலியல் சுற்றுலாக்களில் பயன்படுத்தப்படுகின்றனர். மேலும் கிராமப்புறங்களில் 10000-12000 சிறுவர்கள் குற்றங்கள் புரியும் அமைப்புக்களினால் கடத்தப்படுவதாக மற்றொரு கணிப்பீடு கூறுகின்றது. 100000 சிறுவர்களிடம் எய்;ட்ஸ் தொற்று காணப்படுவதுடன், அரசாங்கம் 2000 பேரைக் கொண்டும் தனியார் குழுக்கள் 40000 பேரைக் கொண்டும் பாலியத்தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்.
எனவே இலங்கையில் கொழும்பு, கண்டி, நீர்கொழும்பு, நுவரெலியா, ஹிக்கடுவ, காலி போன்ற நகர்களில் பெருமளவு விபச்சாரம் நடைபெறுகின்றது. Massage Center, Night Club, Medical Clinic, Brothel Hotel, Restaurant இது போன்றவற்றில் உள் நாட்டு வெளி நாட்டு (Chinese, Russian, Korean) பெண்களைக் கொண்டு நடாத்தப்படுகன்றது.
விபச்சாரத்தினால் ஏற்படும் சவால்கள்
விபச்சாரத்தினால் சமூகம் பலவித இடர்பாடுகளை எதிர் கொள்வதினால் சமூக கட்டமைப்பு, இயல்பு நிலை, கலாசாரம் பாதிக்கப்படும். இப்பாதிப்புகள் அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அமையப்பெற்றிருக்கும் அவற்றினை கீழ்கண்டவாறு குறிப்பிடமுடியும்.
* மக்கள் சமூககட்டுக்கோப்பினை உடைத்தெறிந்துவிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுவதால் சமூக கட்டமைப்பு சீர்குலையும் அபாயம் ஏற்படும்.
*முறை தவறிய பாலியல் நடவடிக்கைகளால் ஆண், பெண் இருவரிடையேயும் எளிதாக பாலியல் நோய் தொற்றிக்கொள்ளும்;.
Eg: HIVவைரஸ் மூலம் எய்ட்ஸ் நோய்க்கு உள்ளாதல்.
*விபச்சாரத்தினை நாடி ஆணோ, பெண்ணோ செல்லும்போது, குடும்ப உறவகள் அதைத் தடுக்க முற்படுவதால், முரண்பாடு ஏற்பட்டு வன்முறை நடவடிக்கைகளாக மாற்றப்படும்.
*பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகத் தொழிற்பட வேண்டிய பெற்றோர் விபச்சாரத்தில் ஈடுபடுவதால் அதைக் கண்காணித்து எதிர்காலத்தில் பிள்ளைகளும் நெறிபிறழ்வான நடத்தையில்; பங்குவகிப்பர்.
*தமது அன்றாட கருமங்களிற்காக மட்டுமல்லாது விபச்சாரத்திற்காக வேண்டியும் உழைக்க வேண்டி இருப்பது மட்டுமன்றி அன்றாட கருமங்களைச் செய்யாது சிலவேளை அப்பணத்தை விபச்சாரத்திற்கு செலவளிப்பதனால் பொருளாதாரப் பின்னடைவை குடும்பம் சந்திக்கும்.
*பாலியல் வன்முறை, பாலியல்க் கடத்தல், கொலைமிரட்டல், பாலியல் துஷ்பிரயோகம் என்பன பாலியல் தொழிலினினால் உருவெடுத்த குற்றங்களாகும். இவை அதிகரித்துச் செல்லும்.
*விபச்சாரத்தின் மூலம் குழந்தைகள் பெறும்போது அவற்றிற்கான அங்கிகாரம் சமூகத்தில் கிடைக்கப் பெறாமையினால் சமூக அங்கிகாரமற்ற தன்மையுடைய பிரிவினர் தோற்றம்பெறுவர்.
*விபச்சார தொழில் பேட்டை பிரதேசமாக நாட்டிற்கு நாடு உருவெடுப்பதனால், (Red Light Area) அவற்றினை நம்பி மக்கள் வாழக்கூடிய மக்கள் சமுதாயம் உருவாகும்.
ஆகவே மேற்கூறிய சவால்களை விபச்சாரம் எதிர்நோக்குகின்றது. இருப்பினும் இச்சவால்கள்கூட விபச்சாரத் தொழிலைப் பாதிக்கவில்லை. மாறாக இத் தொழில் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டு செல்வதனையே காணக்கூடியதாக உள்ளது.
சவால்களை முறியடிக்கக்கூடிய தீர்வுயோசனைகள்
நாம் விபச்சாரத்தினை சமூகத்திலிருந்து களைந்தெடுக்க முதலில் அதற்கான காரணம், சவால் என்பவற்றைக் கண்டறிந்து அதிலிருந்து மீண்டுவரக்கூடிய வழிமுறைகளை அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை செயற்படுத்த வேண்டும். அந்தவகையில் சிலவகை தீர்வுயோசனைகளாக பின்வருவனவற்றைக் கூறமுடியும். அவையாவன,
*கடுமையான தண்டனை முறைகளை அமுல்ப்படுத்தல், அதாவது சில முஸ்லிம் நாடுகளில உள்ளது போல் கல்லெறிந்து கொல்லுதல், பகிடிவதை செய்தல், மொட்டையடித்தல் முதலியவற்றை விதித்தல்.
புனர்வாழ்வளிக்கும் செயற்றிட்டங்களை ஏற்படுத்தல், அதாவது விபச்சாரத்திலிருந்து மீண்டுவர விரும்புவோரை அவர்களது உறவுகளோடு சேர்ப்பது, அவர்களிற்கு வாழ்;க்கைத்துணை, வாழ்;வாதாரத்திற்கு சிறு கைத்தொழில் முயற்சிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
*குடும்பக் கண்காணிப்பின் அவசியம்பற்றி அறிவூட்டல், அதாவது குடும்பத் தலைவன் தம் குடும்பத்தினர் மீது ஆழ்ந்த கண்காணிப்புடன் செயற்படுவதுடன் சில அவசியமான தேவைப்பாடுடைய கட்டுப்பாட்டு முறைகளை விதிப்பது பற்றி சமூக அறிவூட்டும் செயற்பாடுகளைச் சொல்லிக்கொடுத்தல்;.
சமயங்களின் விபச்சாரத்தின் நிலைப்பாட்டை அவ்வப்போது விளக்கல், எல்லாச் சமயங்களிலும் ஏதோ ஒரு வகையில் சமயப் போதனை நடைபெறுகின்றது. அங்கு விபச்சாரப் பாவத்தின் கொடிய தண்டனை பற்றி அடிக்கடி கூறுதல்.
*அரசாங்கம் Red Light Area களை கண்டறிந்து இல்லாமல்ச் செய்தல், அதாவது இங்குள்ளோரை அப்புறப்படுத்தி குடு;ம்ப ரீதியான ஒழுங்கமைப்பாக மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளை அதிகாரத்துடன் செயற்படுத்துதல்.
*ஊடகக் கலாசாரத்தினைப் பேணுதல், விபச்சாரத்தின் கிளைகளிலொன்றாகத் திகழும பாலியல் கிளர்ச்சியத்திற்கு (Pornography) ஊடகமே வழிகாட்டுகின்றது. இதிலிருந்து விடுபட்டு ஊடகம் எதிர் நிலைப்பாடான விபச்சாரத்திலிருந்து விடுபடக்கூடிய விழிப்புணர்வூட்டும் அம்சங்களில் முழு மூச்சாகச் செயற்படல்.
இவற்றை மேற்கௌ;வதன் மூலம் சமூகத்தில் விபச்சாரத்தினை ஓரளவு கட்டுப்படுத்தி சமூக ஒழுங்கை முறையாகப் பேணக்கூடியதாக இருக்கும்.
No comments:
Post a Comment