Pages

Jun 27, 2013

அட்டாளைச்சேனை 12 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 12 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி;.சரவணராஜா நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகின்ற தரம் 12 வயதுடைய தனது மூத்த மகளை 33 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையார் கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக இருந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட சிறுமி அம்மம்மாவுடன் பொலிஸாரிடம் புதன்கிழமை மாலை முறைப்பாடு செய்ததை அடுத்து, தந்தையை கைது செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். TM

No comments:

Post a Comment