அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையமானது ' சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை மதிப்பீடு செய்தல்' எனும் தொனிப்பொருளுக்கமைவாக 18.05.2013 ஆந் திகதி சனிக்கிழமை ஒரு நாள் செயலமர்வொன்றை நடாத்தியது. இதன்போது அம்பாறை மாவட்டத்தின் சுற்றாடல் அதிகாரசபையின் நிறைவேற்று அதிகாரி ஜனாப் : எம்.ஏ.சீ. நஜீப் அவர்கள் வளவாளராக வழிநடாத்திச் சென்றார்.
இந்நிகழ்வுக்கு இணையத்தின் தவிசாளர் திரு: வ.பரமசிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் பணிபுரிகின்ற உள்ளுர் அரச சார்பற்ற அமைப்புக்களின் 28 பிரதிநிதிகள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் திரு: கே. ரத்னவேள் (ஜே.பி) அவர்களும் பங்குபற்றினர். இதன் போது நாம் வாழுகின்ற சுற்றுச்சூழலானது எவ்வாறு மாசுபடுகின்றது. அதனை பாதுகாக்க நாங்கள் எப்படியான முயற்சிகளை செய்யலாம் மற்றும் தற்போது உலகம் மற்றும் வளிமண்டலம் என்பன எவ்வாறான நிலையில் உள்ளது போன்ற பல்வேறு தகவல்கள் பங்குபற்றுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு பங்குபற்றுனர்களின் சமர்ப்பனங்களும் கேள்விகளும் அதற்கான முறையான ஆலோசனைகளும் பறிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment