Pages

May 31, 2013

நீச்சல் வீராங்கனையின் அபாயகரமான கவர்ச்சி மிகு சாதனை (படங்கள்)

பிரபல திரைப்படமான ஸ்பிளாஷில் வரும் கடல் கன்னியை பார்த்து கடற்கன்னியாக மாற வேண்டும் என்ற ஆசை வந்து திமிங்கலம், சுறா, டால்பின் போன்ற பெரிய மீன்களுக்குப் போட்டியாக, சற்றும் பயமின்றி ஆழ்கடலில் அற்புதம் செய்து வருகிறார் நீச்சல் வீராங்கனை பிரேசர்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த, 36 வயதான ஹன்னா பிரேசர் ஒரு ஆழ்கடல் நீச்சல் வீராங்கனை ஆவார்.
இவர் தற்போது செயற்கையான வாலைப் பொருத்திக் கொண்டு கடலுக்குள் பல்வேறு ஜாலங்களைச் செய்கிறார். சுறா மீன்களுடன் போட்டி போட்டுக் கொண்டு கடலுக்குள் அவர் நீந்தி விளையாடுவதை பலரும் பீதியோடு பார்க்கின்றனர்.
3 வயதாக இருக்கும்போதே கடற்கன்னிகள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தாராம் பிரேசர். 9 வயதானபோது உண்மையான கடற்கன்னியாக அவர் மாறிப் போனார்.

அதாவது கடற்கன்னிகளுக்கு இருப்பதைப் போன்ற வாலை உருவாக்கி தனது உடலில் பொருத்திக் கொண்டு நீச்சலடிக்க ஆரம்பித்தார்.
இப்போது திமிங்கலம், சுறா, டால்பின் போன்ற பெரிய சைஸ் மீன்களுக்குப் போட்டியாக,சற்றும் பயமின்றி ஆழ்கடலில் அற்புதம் செய்து வருகிறார் பிரேசர்.
வெறும் நீச்சல் வீராங்கனையாக மட்டும் அல்லாமல், நடிகையாக, மாடல் அழகியாகவும் இருக்கும் இவர், கடலில் 45 அடி ஆழம் வரைக்கும் கூட படு தைரியமாக போய் வருகிறார்.

அத்துடன் மூச்சைப் பிடித்து சில நிமிடங்கள் வரை உள்ளேய இருக்கிறாராம். வாவா தீவுப் பகுதியில் திமிங்கலங்கள் அதிகம். அந்தக் கடல் பகுதியில் திமிங்கலங்களுடன் சேர்ந்து இவரும் நீச்சலடித்த காட்சியைப் பார்த்து பலரும் உறைந்து போயினர்.

திமிங்கலங்களைக் கொல்வதைக் கண்டித்து இந்த சாதனை நீச்சலைச் செய்தாராம் பிரேசர். அதேபோல 2007ம்ஆண்டு டால்பின்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து ஜப்பானின் தைஜி கடல் பகுதியில் 30 பேருடன் சேர்ந்து ஆழ்கடல் நீச்சலடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். அப்போதும் கடற்கன்னி வேஷம்தான்.

2009ம் ஆண்டு மெக்ஸிகோவின் குடலுப் என்ற கடல் பகுதியில் மிகப் பெரிய வெள்ளை சுறாக்களுக்கு இணையாக கடற்கன்னி வேடத்தில் கடலில் சில நிமிடம் இருந்து திகில் சாதனையும் படைத்துள்ளார் பிரேசர். அந்த சுறாக்கள் 14 அடி உயரம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment