Pages

May 31, 2013

மாணவர்களின் சாதாரண உண்ணாவிரதம் சாகும் வரை உண்ணாவிரதமானது

மாணவர்களின் சாதாரண உண்ணாவிரதம் சாகும் வரை உண்ணாவிரதமானது
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நான்கு மாணவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதம் சாகும்வரையான உண்ணாவிரதமாக மாறியுள்ளது.

குறித்த மாணவர்கள் உணவு, மருந்து, நீர் என்பவற்றை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க உறுப்பினர் கிறிஸ்ண லக்கல தெரிவித்தார்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகம் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர்களின் மாணவர் அந்தஸ்த்தை பறித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சாகும்வரையான உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment