காத்தான்குடியில் பதற்றம் பொலிசார் ,இராணுவம் குவிப்பு(படங்கள் இணைப்பு)
தெரிவித்து இன்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி ஜாமிஉல்ழாபிரீன் மையவாடியில் பதற்றம் ஏற்பட்டது.
மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடியின் ஒரு பகுதி காத்தான்குடி நகர சபையால் ஆக்கிரமிக்கப்படுவதாக
பதற்றத்தை தடுக்க வந்த பொலிசாருக்கு பொது மக்கள் கல் எறிந்ததால் நிலைமை மோசமைந்ததோடு மட்டுமன்றி மட்டக்களப்பில் இருந்து பொலிசாரும்,இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு விரைந்து நிலமைகளை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது குறித்த இடத்தில் பொலிசாரும்,கலகம் தடுக்கும் படையினரும்,போக்குவரத்து பொலிசாரும்,இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
பதற்றம் நடந்த நேரத்தில் பொது மக்களை பொலிசார், சிவில் உடை அணிந்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் தகரங்கள் ,வேலிகள் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment