சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு
தலங்கம
- பெலவத்தயிலுள்ள வீடொன்றில் மிகச் சூட்சுமமான முறையில் மதுபான
உற்பத்தியில் ஈடுபட்டுவந்த குறித்த நிலையம் தொடர்பான தகவல்
கிடைத்ததையடுத்து பாணந்துறை - வலானை ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்றிரவு
சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்ட விரோத மதுபானம் தயாரிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது
மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரும், மதுபானக் கொள்வனவிற்காக
முச்சக்கரவண்டியில் வருகை தந்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன்,
மதுபான உற்பத்திக்கான மூலப்பொருட்கள், காய்ச்சப்பட்ட மதுபானம் ஆகியவற்றை
இதன்போது வலானை ஊழல் தடுப்புப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment