பிரித்தானிய மகாராணி பொது நலவாய மாநாட்டினைப் ஏன் பகிஷ்கரிக்கின்றார் ? : ரவி கருணநாயக்க
பிரித்தானிய மகாராணி பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாது ஏன் கலந்து கொள்ளவில்லையென்றால்,அதன் மூலம், சிறிலங்கா அரசுக்கு உறுதியான செய்தி ஒன்றைத் தெரிவித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஏஎப்பி செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாக அறிய வருகிறது.
´சிறிலங்காவில் மனித உரிமையை மேம்படுத்துங்கள்´ என்பதே மகாராணி பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாதிருப்பதன் மூலம் விடுத்திருக்கும் அரசியல் செய்தியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் மனித உரிமை மேம்படுத்தப்படாவிட்டால் அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என கனடா முன்னதாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்திருக்கின்றன.
No comments:
Post a Comment