Pages

May 9, 2013


மத்தல விமான நிலையத்தை கைவிட்டது எயார் அராபியா!

இலங்கையில் புதிதாக திறக்கப்பட்ட மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் தமது சேவைகளை ஆரம்பித்த எயார் அராபியா விமான நிறுவனம் சேவைகளை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

2013 மே மாதம் தொடக்கம் எயார் அராபியா விமான நிறுவனம் தமது மத்தல விமான சேவைகளை இரத்து செய்கிறது. 

மத்தல விமான நிலையம் திறக்கப்பட்டு முதல் சர்வதேச விமான சேவையாக எயார் அராபியா தமது சேவையை தொடங்கியமை குறிப்பிடத்தக்கது. 

6 வார கால சேவையின் பின் இந்த சேவை இரத்து முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. 

எயார் அராபியா மத்தல விமான நிலையத்தில் இருந்து வாராந்தம் இரண்டு விமான சேவைகளை செயற்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment