Pages

May 9, 2013

குர்ஹாம் சாக்கீ கொலை தொடாபில் நாமலின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது – சிமோன் டான்சூக்


பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் சாக்கீ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷவின் இந்தக் கருத்து வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார்.
 
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்படும் என நாமல்  ராஜபக்ஷ அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது எனவும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த சம்பவத்துடன் தமது கட்சி அரசியல்வாதியொருவர் தொடர்புபட்டுள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது என நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, குற்றச் செயல் தொடர்பில் துரித கதியில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார்.
 
விசாரணைகள் நத்தை வேகத்தில் நகர்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.ஆளும் கட்சி அரசியல்வாதி இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட காரணத்தினால் நாட்டின் நன்மதிப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.குர்ஹாம் சாக்கீ கொலை தொடாபில் நாமலின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது – சிமோன் டான்சூக்
 

No comments:

Post a Comment