யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெயர்ந்த 26721 பேர் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை என நோர்வே அகதிகள்; பேரவை தெரிவித்துள்ளது. அதிகளவான இடம்பெயர் மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு முடியாத நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
குடியிருப்புக்கள் மற்றும் விவசாய காணிகளை பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வருவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக நோர்வே அகதிகள் பேரவையின் செயலாளர் டோரி பெக்கே தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு இடம்பெயர் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு இடம்பெயர் மக்களுக்கு நிலையான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இடம்பெயர் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர் மக்கள் தங்களது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதில் இன்னொரென்ன சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அரச அதிகாரிகள் சரியான முறையில் இனங்கண்டு அவற்றுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்

No comments:
Post a Comment