Pages

May 27, 2013

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு தற்காலிக வீசா

சவூதி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்திற்கு அமைவாக, அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்களுக்கு தற்காலிக வீசாக்களை வழங்க விரைவான நடமாடும் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரியாத் நகரில் உள்ள இலங்கை தூதுரகம் இந்த நடமாடும் சேவையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சவூதியின் பல பகுதிகளுக்கு சென்று அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு இவ்வாறு தற்காலிக வீசாக்கள் வழங்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு, சவூதி அரசாங்கம் வழங்கியுள்ள பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குவைட் அரசாங்கமும் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவைட் அரசாங்கத்தின் பொது மன்னிப்பு காலம் தொடர்பான இறுதி தீர்மானம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரிடம் குறிப்பிட்டார்.(VV)

No comments:

Post a Comment