Pages

May 17, 2013

வவுனியாவில் மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் தற்கொலை முயற்சி - மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளன

வவுனியாவில் மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளன.

ஐந்தரை, மூன்றரை மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தைகளே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

கிணற்றில் குதித்த பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

என்ன காரணத்திற்காக இந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவரவில்லை.

இந்த சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment