உலகளாவிய ரீதியில் சர்வதேச அன்னையர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நாளில் உலக வாழ் அனைத்து அன்னையர்களுக்கும் நியூஸ்லைன்இன்போ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.உயிர்களை இவ்வுலகில் ஜனனிக்க செய்த பெண்மையின் ஓர் வடிவமான அன்னையை கெளரவித்து அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே இந்த
தினத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.16 ஆம் நூற்றாண்டில் மேற்கு வேர்ஜினியாவில் அன்னையை போற்றும் வகையில் பிரபல சமூக சேவகியான அனா ஜார்விஸ்னால் கிராப்டன் நகரில் இந்த தினம் உருவாக்கப்பட்டது.இதன் பிரகாரம் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு 'மதறிங் சன்டே' என (mothering sunday) அழைக்கப்பட்டது.அக்காலத்தில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்கள் நாலா பக்கமும் சிதறிப்போயிருந்தன.பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களுடைய நல்வாழ்வு மற்றும் சமாதானத்திற்கு அயராது பாடுபட்ட ஜார்விஸை கௌரவிக்கும் பொருட்டே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.1914 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி வுட்டோர் வில்ஸன் வருடாந்தம் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அனுஷ்டிக்க வேணடும் என அறிவிப்பை விடுத்தார்.இதனை கனடா அரசும் அங்கீகரித்ததுடன் 46 நாடுகள் இத்தினத்தை அன்னையர் தினமாக ஏற்றுக்கொண்டுள்ளன.எனினும் இன்றைய காலகட்டத்தில், அரவணைத்த தாய் அன்பை உதறிவிட்ட பிள்ளைகளால் முதியோர் இல்லங்களிலும் வீதிகளிலும் அவர்கள் முடங்கியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.அன்னையர் தினமான இன்றேனும் அவர்களின் உணர்வறிந்து மகிழ்வித்து போற்றிடுவோம் வையகத்தில் வாழும் தெய்வத்தை!
No comments:
Post a Comment