Pages

May 11, 2013


அக்கரைப்பற்று மாநகர வீதிகளை புணரமைக்க மேயருக்கு ஏ.எல்.மர்ஜூன் கடிதம்!

அக்கரைப்பற்று மாநகர வீதிகளை புணரமைப்பதற்காக எடுத்த
நடவடிக்கைகள் ஆரம்ப கட்டத்திலேயே நிற்பதால் மக்கள் பல்வேறு கஸ்டங்களை அனுபவிப்பதாகவும், பாதை வேலைகளை விரைவில் நிவர்த்தி செய்து தருமாறும் கோரி ஏ.எல்.மர்ஜூன் அக்கரைப்பற்று மாநகர மேயருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தேசிய அபிவிருத்தி தொடர்பில், வீதி அபிவிருத்தி மற்றும் வீதி புணரமைப்பு நடவடிக்கைகள் மக்களது மேம்பாட்டுக்கு உதவி வருகின்ற இச்சந்தர்ப்பத்தில், அக்கரைப்பற்று மாநகர உள்ளுர் வீதிகள் ஆரம்பித்த நிலைமையிலேயே இன்னும் இருந்து கொண்டிருப்பது துரதிஸ்டமானதும் மிகுந்த கவலைக்குரியதும் என்பதை தங்களுக்கு மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.

மழை காலங்களில் எந்தவொரு உள்ளுர் வீதியாலும் பயணிக்க முடியாத நிலைமையும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகளின் போக்குவரத்து கஸ்டமும் தாங்கள் அறியாத ஒன்றல்ல. வாகனங்களுக்கு ஏற்படகின்ற இடர்களும் சுமையாகிப் போய்விட்டது. தற்போது புணரமைக்கப்பட்டு வரும் வடிகான்களும் நேர்த்தியாக இல்லாததினால் அவற்றினாலும் எதிர்காலத்தில் மேலும் பல அசௌகரியங்கள் ஏற்படும் என அஞ்சுகின்றேன்.

கோடை காலமானதும் புழுதியால் வீதியால் மாசடைந்து நடமாடுபவர்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் வசிப்பவர்களுக்கும் கூட சுவாச நோய்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பது, எதிர்காலத்தில் நிரந்தர நோயாளிகளாக மக்களை மாற்றக்கூடிய அபாயகரமான நிலையாகுமென்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் பாதுகாப்புக்காக மின்மாற்றிகளை சுற்றிக் கட்டப்பட்ட சுவர்களால் இன்று எலிகள் மற்றும் விசஜந்துகளின் இருப்பிடமாகவும், கழிவுகள்,பறவைகளால் கொண்டு வரப்படும் எச்சங்களின் இருப்பிடமாகவும் மாறி நுளம்பு பெருக்கமும் சேர்ந்து ஆரோக்கித்திற்கு பெரும் சவாலாக மாறியிருக்கின்றது.

அதுபோலவே வெறுமையாகக் கிடக்கும் மக்களது குடியிருப்பில்லாத வளவுகளும் அசுத்தங்களினால் நிறைந்து மக்களின் ஆரோக்கியத்திற்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கின்றது.

ஆகவே தங்களது உயர் கவனத்தின் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களது ஆரோக்கியமானதும் அமைதியானதுமான வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.AD,in

No comments:

Post a Comment