மனித உரிமை ஆணைக்குழுவினர் அஸாத் சாலியை சந்தித்து பேச்சு
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் பிரதீபா மஹானாம ஹேவா உள்ளிட்ட அதிகாரிகள் ஆறு பேர் கொழும்பு மாநகர முன்னாள் மேயர் அஸாத் சாலியை சந்தித்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அஸாத் சாலி சிசிச்சை பெற்று வரும் நிலையிலேயே மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரை இன்று வியாழக்கிழமை பார்வையிட்டுள்ளனர்.
தன்னுடைய தந்தை சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அஸாத் சாலியின் மகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்தார்.
இதனையடுத்தே மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் தலைமையிலான குழுவினர் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு அஸாத் சாலியை பார்வையிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment