அஸாத் சாலியை விடுவிக்கக் கோரி இணையத்தள மனுச்சேவை: மன்னிப்புச்சபை
முஸ்லிம் அரசியல்வாதியான அஸாத் சாலியை விடுதலை செய்யக்கோரும் இணையத்தள மனுச்சேவையொன்றை சர்வதேச மன்னிப்புச்சபை ஆரம்பித்துள்ளது.மேற்படி இணையத்தள மனுவில் அஸாத் சாலியை விடுதலை செய்ய வேண்டும் அல்லது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும் தடுப்புக்காவலின் போது அவருக்கு காருண்யமான முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதையும் அவரது குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் அவரைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதையும் அவருக்குத் தேவைப்படக்கூடிய எதுவித மருத்துவ கவனிப்பை வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஸாத் சாலிக்கு எதிராக இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லையென சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளுடனான தொடர்பு மற்றும் நாட்டில் இனங்களுக்கிடையே குரோதத்தை உருவாக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அஸாத் சாலி கைது செய்யப்பட்டதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
மேற்படி மனுவில் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் அனைவருக்கும் தாங்கள் கைது செய்யப்பட்டமைக்கான காரணங்களையும் தங்களுக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக அறிந்து கொள்வதற்கும் தங்கள் தடுப்புக்காவலை சட்டத்தின் மூலம் சவாலுக்கு உட்படுத்தவும் நீதியானதும் காலம் தவறாததுமான நீதி விசாரணையொன்றை கோருவதற்கும் சித்திரவதையிலிருந்து விடுபடுவதற்குமான உரிமையுள்ளதெனவும் சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment