அஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலி சென்னையில் வைத்து தெரிவித்திருந்த கருத்து, அறியாமல் செய்த தவறு எனவும் அதற்காக மன்னிப்புக் கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நேற்றிரவு சத்திய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அரசாங்கத்துடன் தொடர்புடைய உயர் மட்டத் தரப்புகள் தெரிவித்துள்ளன.கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அவருடைய சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
தற்போது இவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, அஸாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment