Pages

May 6, 2013

பன்றி கொல்லும் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட 21 சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

திஸ்ஸமகாராம - போகஹபெலஸ்ஸ சிறுவர் இல்லத்தில் இருந்த 21 சிறுவர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

திஸ்ஸமகாராம நீதவான் ருவான் டி சில்வாவின் உத்தரவின் பேரில் சிறுவர்கள் இன்று (06) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

திஸ்ஸமகாராம - போகஹபெலஸ்ஸ சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்கள் இறைச்சிக்காக பன்றி கொல்லும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து திஸ்ஸமகாராம பொலிஸாரும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரி சபையும் விசாரணை மேற்கொண்டது.

குறித்த சிறுவர் இல்லத்தில் 80 சிறுவர்கள் இருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் 21 சிறுவர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் ஒப்படைக்கப்பட்டனர்.

சிறுவர் இல்ல உரிமையாளர் மற்றும் இளம் வயது யுவதி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment