Pages

Apr 30, 2013

மலேசியாவில் அரசியல்வாதியை தாக்கிய இரு இலங்கையர்கள் கைது

மலேசியாவில் அரசியல்வாதியை தாக்கிய இரு இலங்கையர்கள் கைதுமலேசியாவின் பெராக் பகுதி பிதோர் நகரில் மலேசிய அரசியல்வாதி ஒருவர் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் ஒரு இந்தியரும் இரு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் மே 5ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் விவகாரத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மலேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று (29) பிதோர் நகருக்கு சென்று கொண்டிருந்த 32 வயதுடைய அரசியல்வாதி ஒருவரின் காரை வழிமறித்த மேலும் இரண்டு கார்களில் வந்தவர்கள் இத்தாக்குதலை நடாத்தியுள்ளதாக பெரக் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான அரசியல்வாதி டபா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பெரக் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் பொலிஸார் ஒரு இந்தியர் மற்றும் இரு இலங்கையர்கள் உள்ளிட்ட அறுவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டோர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கான அரசியல்வாதி இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என மலேசிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment