Pages

Apr 7, 2013

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா பயணித்தவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் - HRW கோரிக்கை 

 சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று நடுக் கடலில் விபத்துக்குள்ளாகி காப்பாற்றப்பட்டுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறாக இலங்கை அகதிகள் 19 பேர் டுபாயில் அடைக்களம் கோரியுள்ளனர். இந்நிலையில் இவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது. 46 பேர் சென்ற படகில் 39 பேரை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஏனைய 7 பேர் இலங்கைக்கு ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீதமுள்ள 19 பேரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய அரபு இராச்சியம் எடுத்து வருகிறது. இவர்கள் இலங்கைக்கு திரும்பி அனுப்பப்பட்டால் அங்கு சித்திரவதைகளுக்கு உட்படுவர் எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக் காட்டியுள்ளது.

No comments:

Post a Comment