Pages

Apr 27, 2013

பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடைபெறுகின்றமை சபையின் கொள்கைக்கு பாதிப்பு - கனடா

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர் மாநாடு இலங்கையில் நடைபெறுகின்றமை, பொதுநலவாய சபையின் பெறுமதி மற்றும் கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைவதாக கனடா தெரிவித்துள்ளது.
லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் அமைச்சு நடவடிக்கை கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேயார்டி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கனடாவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பக்கச்சார்பானவை எனவும், நியாயமற்றவை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பி.பி.சி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

 

No comments:

Post a Comment