பொதுபல சேனா அமைப்பு கல்முனையிலும் காரியாலயம் ஒன்றை அமைக்கவுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் டிலந்த விதானகே அறிவித்துள்ளார்.
அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும் அவர்கள் நாடு திரும்பியதும் கல்முனையில் காரியாலயம் அமைப்பது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கல்முனையிலிருந்து நேற்றைய தினம் பொது பல சேன அலுவலகத்திற்கு வருகை தந்த சிலர் கேரிக்கை விடுத்ததை அடுத்தே அங்கு அலுவலகம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப் பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பொதுபல சேனா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனக் கோரி கல்முனை மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment