பகுதியளவில் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க நடவடிக்கை
கல்வி மற்றும் உயர்தர பரீட்சையில் காணப்படுகின்ற கடும் போட்டித்தன்மையை குறைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.இதற்கமைய பகுதியளவில் அரச பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்ஷனிகா ஹிரும்புரேகம தெரிவித்துள்ளார்.
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் காணப்படுகின்ற போட்டித் தன்மை மாணவர்களை உளரீதியில் பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி, மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் நடைமுறையொன்றை ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களின் தரத்தை பாதுகாக்கும் வகையில் மற்றுமொரு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment