Pages

Apr 28, 2013

காதல் தோல்வியால் வேதனை: காதலன் வீட்டில் பெண் என்ஜினீயர் தீக்குளித்து சாவு

காதல் தோல்வியால் வேதனை: காதலன் வீட்டில் பெண் என்ஜினீயர் தீக்குளித்து சாவுதிருவனந்தபுரத்தை சேர்ந்தவர் புவனேந்திரன் நாயர். இவரது மகள் ஜீவா நாயர் (23). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜீனியராக வேலை பார்த்து வந்தார். திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராகுல் (24). சென்னை போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜீனியராக வேலை பார்த்து வருகிறார்.

பள்ளிக்கரணையை அடுத்த ஜல்லடியன்பேட்டையில் வீடு எடுத்து தங்கி உள்ளார். ஜீவா நாயரும், ராகுலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவ்வப்போது போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக ஜீவா நாயருடன் பழகுவதை ராகுல் நிறுத்திவிட்டார். இதனால் நேற்று மதியம் ஜீவா நாயர் பெங்களூரிலிருந்து சென்னை வேளச்சேரிக்கு வந்து ராகுலை சந்தித்தார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராகுல் அவரை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஜீவா நாயர் மனம் 
உடைந்தார். பின்னர் ஜீவா நாயர் தான் குளிக்க வேண்டும். அதனால் ராகுல் வீட்டிற்கு அழைத்து செல்ல கூறியுள்ளார். ராகுலும் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அறையின் கதவை பூட்டிக்கொண்டு ஜீவா நாயர் பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் அவர் அலறி துடித்தார். வெளியில் நின்றிருந்த ராகுல் கதவை உடைத்துக் கொண்டு பார்த்த போது ஜீவா நாயர் உடல் கருகி பிணமாக கிடந்தார்.

பள்ளிக்கரணை போலீசார் பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு பொது மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். 

No comments:

Post a Comment