Pages

Apr 19, 2013

பெண்களின் வியர்வை துளிகளில் செழித்துக் கொண்டிருக்கும் இலங்கை நாடு.

 

என் பணிவான வேண்டுகோள் இக் கற்றுரையை ஆத்திரத்தோடு செவிமடுக்காதீர்கள் இதில் உள்ள நல்லவைகள் உங்களுக்கு தெரிமால் போய்விடும் மாறாக அனுதாபத்தோடும் செவிமடுக்காதீர்கள் இதில் உள்ள கெட்டவைகள் உங்களுக்கு தெரியாமல் போய்விடும். எனவே நடு நிலையாக இருங்கள் நல்லது கெட்டது எது என்பதை மனசாட்சி உள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தினை தொட்டுப்பார்க்கும் என நினைத்தவளாக............

எமது நாட்டின் தாய்மை இனம் பல விதமான அடக்கு முறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். உன்மையை கூறப்போனால் பெண்னாகப்பட்டவள் பிள்ளை ஒன்றை பெற்றெடுத்து அந்த பிள்ளையை சிறந்த மனிதனாக்குவது தொடக்கம் தன் தாய் நாட்டை செழிப்பாக வைப்பதில் கூட முதன்மை பெற்றவர்கள் பெண்களே!

அந்தவகையில் எமது நாட்டின் வருமானம் ஈட்டிதரக்கூடிய 1,2,3இம் மூன்று வளிமுறைகளில் முதலிடத்தை மற்றும் முக்கிய பங்கு வகிப்பவர்களும் பெண்களே! மேலும் மேற்படி விடயத்தை நாம் சற்று விரிவாக ஆராய்வோமானால் சில விடயங்களை எம்மால் அறிந்து கொள்ள முடியும்.

1) முதலாவது வறுமானமாக எமது நாட்டு மக்கள் 13லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்
ஆனால் இதில் அதிகமானவர்கள் பெண்க‌ளே!

மேற்படி 13லட்சம் மக்களின் பாதுகாப்பிற்கென சுமாராக 5 பேர் கொண்ட குழுவி‌னரை மாத்திரமே அரசு நியமித்திருக்கின்றது. ஆனால் இந்த பொறுப்புதாரிகளும் சரியாக செயற்படுவதில்லை என்பதனை ஜித்தாவின் பாலத்திற்கு கீழ் அவதிப்படும் மக்களின் நிலமை எங்களுக்கு தெளிவுபடுத்துகிறது.

இது இப்படி இருக்க பெண்களினுடைய உழைப்பின் வருமானத்தை மையமாக கொண்டு இயங்குகின்ற இன்றய அரசாங்கம் ஒரு அமைச்சருக்காக எத்தனை பாதுகாப்பு மற்றும் எத்தனையோ போக்குவரத்து வசதி வாய்புகள் உட்பட இன்னும் அதிகமான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்திறுக்கின்றது. எனவே இன் நிகழ்வை மையமாக வைத்து சற்று சிந்தித்து பாருங்கள் உழைக்கும் மக்களின் நிலமை என்ன என்பதை பற்றி?

2) எமது நாட்டின் இரண்டாவது வருமானமாக ஆடை தொழிலை கணிக்கப்படுகின்றது இதில் கூட அதிகமாக பணிபுரிபவர்கள் பெண்களே! ஆனால் இன்று சிறை கைதிகளின் விடுதலையை போன்று மாதத்தில் ஒரு முறை ஆடை தொழிற்சாலையிலிருந்து விடுமுறை வழங்கப்படுகின்றது. இதன் பேது மாத வருமானத்தில் அரைவாசி பணத்தை போக்குவரத்திற்காகவும் மீதிப்பணத்தோடு தன் குழந்தை மற்றும் உரவினர்களோடு சந்தோஷத்தை பகிர்து கொள்கின்றனர்.

3) எமது நாட்டின் மூன்றாவது வருமானமாக தேயிலை கணிக்கப்படுகின்றது. இதில் கூட அதிகமாக பணியாற்றுபவர்கள் பெண்களே! ஆனால் நாள்தோரு்ம் கொளுந்து பறித்து கூடைகளை நிரப்புகின்ற இவர்கள் எடுக்கின்ற சம்பளத்தில் தன்னுடைய வயிற்றை நிறப்ப முடியாமல் தத்தலித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே எங்கள் வருமானத்தில் அரசியலை வழிநடத்துகின்ற ஒரு அமைச்சரின் வாழ்க்கை நிலையை எங்களோடு ஒப்பிட்டு பாருங்கள். எங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது என்பதனை உங்கள் மனசாட்சியோடு சற்று உரசிப்பாருங்கள்.

தொடர்ந்தும் மேற்படி மூன்று விடயம்களிலும் முதன்மை பெற்றதோடு நாங்கள் நின்று விட வில்லை எங்கள் உழைப்பில் அரசியல் வாதியாக இருக்கட்டும் அல்லது மார்க்கத்தை போதிக்கக்கூடியவராக இருக்கட்டும் இன்று ஏசி கார்களுடனும் பாதுகாப்பு படைகளுடனும் ஓசி வாழ்கை வாழுகின்ற நிலமைகளை நினைக்கும் போது‌ காலம் மாறிப்போய் ஆண்கள் பெண்களுக்கு வாழ்வு கொடுப்பதற்கு பதிலாக ஒரு சில ஆண்களை தவிற மீதி ஏனையோருக்கு நாங்கள் வாழ்கை கொடுத்திருக்கின்றோம் என நினைக்கும் போது எங்களுக்கு இதிலும் முதலிடம் கிடைத்ததையொட்டி பெறுமைப்படுகின்றோம்.

மேலும் என் இனிய உறவுகளே இவ்வளவு பெறுமையை சுமந்திருக்கின்ற பெண்களாகிய நாங்கள் இன்று எம் சமூகத்திற்கு மத்தியில் எந்த இடத்தில் நிற்கின்றோம் என்பதனை சற்று சிந்தித்து பாருங்கள் மேலும் சில விடயங்களை
நான் இந்த இடத்தில் சுட்டி காட்ட வேண்டும் என நினைக்கின்றேன் அந்த வகையில்

எமது நாட்டில் அரசியலில் என்ன உரிமை இருக்கின்றது பெண்களுக்கு????? இதை நான் விரிவாக கூற விரும்பவில்லை
காரணம் அரசில் என்பது ஒரு சாக்கடை என்பத‌னை பெண்கள் என்ன பொதுவாக சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்ற நிலமைகளை வைத்து நான் எப்போதோ உனர்து கொண்டேன் எனவே இந்த சாக்கடை அரசியலை சுயமாக ஒவ்வொரு மனிதனும் சிந்திக்காத வரைக்கும் அதனை அகற்றிவிட முடியாது.

இது ஒரு புரம் இருக்க மார்க்க ரீதியாக பார்போமானால் உதாரணத்திற்கு பெண்கள் வெளிநாடு செல்வது தடை என்று
கூறுகின்றது. ஆனால் இதில் உன்னிப்பாக ஒரு விடயத்தை நாம் உணர வேண்டும். இன்று ஒரு பெண் வெளிநாடு செல்வதற்காக மார்க ரீதியான கடிதம் தேவையாக உள்ளது. ஆனால் பெண்கள் வெளிநாடு செல்வது ஹராமானது என்று கூறுகின்ற அமைப்பிரே அந்த கடிதத்தை வழங்கிவைக்கின்றனர் எனவே இச் சந்தர்பத்தில் நான் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றேன் அந்தவகையில்

இன்று எத்தனை எத்தனையோ பெண்கள் சீதனக் கொடுமையால் வாழ்கை இழந்தவர்களாக இருக்கின்றார்கள்?
போதைகளுக்கு அடிமையாகிய ஆண்களினால் எத்தனை எத்தனையோ பெண்கள் வாழ்கை இழந்தவர்களாக இருக்கின்றார்கள்? மேலும் பெண்கள் வெளிநாடு செல்வது கூடுமானதல்ல என்றால் அவர்களுக்கு அத்தாட்சி கடிதம் வழங்குவது எப்படி கூடுமானது? இக்கடிதம் வழங்கும் போது 500 பணம் அறவிடப்படுகின்றது இது எந்த வகையில் ஹலாலாக மாறுகின்றது???? எனவே சுறுக்கமாக கேட்கபோனால் மேற்படி பிரச்சினைகளின் போது நீங்கள் கூறுகின்ற
மார்கதினுடைய தீர்ப்பு எங்கே ஒழிந்து கொண்டது???

ஆகவே ஒட்டு மொத்த பெண்களினுடைய சோதனை வேதனைகள் மற்றும் வியர்வை கண்ணீர்துழிகளின் ஊற்றில் தான் எங்கள் நாடு உதிர்ந்து கொண்டிருக்கின்றது ஆனால் பெண்களாகிய நாங்கள் தொடர்ந்தும் ஒதுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். என்பதனை சிந்தித்து உணர்ந்து செயற்படுவோம் வாருங்கள் IM

No comments:

Post a Comment