ஹிஜாபினை கைவிட ஒருபோதும் அனுமதியோம்: அஸ்வர் எம்.பி.

பிரிய நிலா நூல் வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் பல்வேறு உயர் பதவிகள் வகித்து மறைந்த நூராணியா ஹஸன் பற்றி ஒரு வானொலியின் இதயக்குரல் ஓய்ந்தது என்னும் நூராணிய ஹஸன் நினைவு மலர் நூல் வெளியீட்டு விழா உயன்வத்தை நூராணியா மஹா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமயில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்று நாங்கள் இலக்கியத்துறையிலும் நாடகத்துறையிலும் கல்வித் துறையிலும் எழுத்துத் துறையிலும் சிறந்து விளங்குப வர்களாக இருக்கின்றோம். ஒரு நாளைக்கு பல்வேறு நூல் வெளியீட்டு விழாக்கள் நடைபெறுகின்றன. சட்டக் கல்லூரியை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை எடுத்துக் கொண்டால் அதி திறமை காட்டக் கூடியவர்கள் எங்கள் மாணவர்கள் இருக்கின்றார்கள்.
இதனை எந்தளவு பார்த்துக் கொண்டு இருக்கன்றார்கள் என்பதைப் பாருங்கள் நீதி அமைச்சுக்கும் ஒரு இக்கட்டான நிலை அரசாங்கத்திற்கு ஒரு இக்கட்டான நிலை. இது எத்றகாக எனில் முஸ்லிம்கள் சட்டக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டது என்று. ஆனால் அது அவர்களுடைய திறமையாகும் கொழும்பு நகரில் வாழும் பிள்ளைகளை விட குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கிராமப்புறத்தில் வாழும் முஸ்லிம் பெண்களின் கல்வித்திறன் மிகவும் உயர்ந்ததாக இருக்கின்றது. இவர்கள் எல்லா விடயங்களிலும் ஆக்கிரமித்துவிடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காலம் மாறும் பொழுது சம்பிரதாயம் மாறுமா? கடமை மாறுமா? மார்க்க அனுஷ்டானம் மாறுமா? தலையில் போட்டு அழகாக இருக்கின்ற அந்தப் பர்தா முறை மாறுமா? மாறவும் கூடாது மாறச் செய்யவும் வேண்டாம். இதனைப் பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன். ஒழுக்கத்தின் அடையாளத்தை முஸ்லிம் மாந்தர்களுக்கு வழங்கியுள்ளது இதனை நாங்கள் ஒரு நாளும் கைவிட மாட்டோம்.
கடைக்குப் போகாதீர்கள் பொருட்கள் வாங்க வேண்டாம் எனக் கூறிய உடனே அவர்களுக்குள்ளேயே அவர்களுடைய அங்கி அணிந்தவர்கள் கூறுகின்றார்கள். இது தவறான வழி என்று கூறுகின்றனர். முஸ்லிமகள்; ஒரு காலத்திலும் தீவிரவாதிகள் அல்ல. தலிபானோ அல் கைதாவோ ஏதாவது செய்தால் அது தனிப்பட்டவர்கள். பௌத்த மதம் கூறுகின்றது கொலை செய்யாதீர்கள் என்று, குடிக்காதீர்கள் என்று. கொலை செய்வது பௌத்த மதத்தின் தவறா? குடிப்பது இந்து மதத்தின் தவறா? இல்லையே. தனிப்பட்டவர்கள் செய்கின்றார்கள். சிறு குற்றத்திற்காக வேண்டி ஒரு சமுதாயத்தையே அழிக்க முனையாதீர்கள். அது செய்யவும் முடியாது.
பண்டைய வரலாற்றில் எமது முஸ்லிம்கள் வைத்தியம் செய்தார்கள் காணியில் வேலை செய்தால் நிலப் பங்கு கிடைத்தது அக்காலத்தில் பண்டமாற்று முறைதான் இருந்தது. இந்தப் பழைய வரலாற்றினை மறக்க முடியாது. அவர்கள் ஒரு நாளும் எங்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கவில்லை. 1872 ஆம் ஆண்டில் முஹமட் லெப்பை உதுமான் லெப்பை என்னும் இருவர் கண்டிப் பெரஹரவுக்கு உதவி செய்தார்கள். அதில் சென்றுள்ளார்கள்.
உயன்வத்தை பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் அல்ஹாஜ் ஹிதாயதுல்லா, ஓய்வுபெற்ற அதிபர் நிஸ்தார், உயன்வத்தை ரம்ஜான் ஆகியோரும் உரையாற்றினார்.N
No comments:
Post a Comment