Pages

Apr 10, 2013

மனைவின் மரணத்துக்கு கணவன் சந்தேகம் !

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்ட தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது கணவன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
 
புத்தளம், கரைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.ஏ. நளீம் என்பவரே இந்த முறைப்பாட்டினை  செய்துள்ளார்.
 
36 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயான தம்பி மரைக்கார் தாஹிரா உம்மா என்ற குடும்ப பெண்னே ஜித்தாவில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவருக்கு கடந்த 07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த பெண் 2012 ஆம் ஆண்டு 04 ஆம் திகதி 10 ஆம் மாதம்  ஜித்தாவுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு தொலைப்பேசி மூலம் நான்கு தடவைகள் மட்டுமே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம்  வீட்டு உரிமையாளர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும், தன்னை எவ்வாறாயினும் மீட்டு இலங்கைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மனைவி தன்னிடம் தெரிவித்ததாக உயிரிந்தவரின் கணவர் கூறினார்.
 
இதனையடுத்து தான் வேலைக்கு அனுப்பிய முகவர் நிலையத்துடன் தொடர்பு கொண்டு விடயத்தினை தெளிவு படுத்தியதாகவும் ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
 
உயிரிழந்த பெண் கடந்த 4 ஆம் திகதி இறுதியாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்டதாகவும் அச் சமயமும் தன்னை விரைவாக மீட்குமாறு கண்ணீர் மல்க கேட்டுள்ளார்.
 
எனவே, தனது மனைவி தற்கொலை செய்திருக்க மாட்டார் என தான் உறுதியாக நம்பவதாகவும்,  அவர் வேலை செய்த வீட்டில் துன்புறுத்தல் காரணமாகவே உயிரிழந்திருக்க வேண்டும் என்றும் அவர் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment