எங்கள் காணியை அபகரித்த நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள்! போராட்டத்தில் மண் அள்ளி தூற்றிய தாய்
நான் சத்தியமாய் சொல்கிறேன், எங்கள் காணியைப் பிடித்து வைச்சிருக்கிற நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள். வயிறெரிந்து சொல்கிறேன் என்று ஏசி மண் அள்ளி வீசித் தூற்றினார் வயதான தாய் ஒருவர்.
வலி. வடக்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எதிரான நேற்றைய போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், இறுதியில் உணர்ச்சி வசப்பட்டுக் கொந்தளித்தார்.
மக்கள் ஊர்வலம் செல்லாத வகையில் பொலிஸார் அவர்களைத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் முன்பாக தடுப்பிட்டு மறித்தனர்.
அப்போதே தனது கட்டுப்பாட்டை இழந்த அந்தத் தாயார் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மேற்கண்டவாறு ஏசினார்.
நான் இது வரை பல வீடுகள் மாறிப் போய்விட்டேன். என் வீட்டை நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள். நான் வீடிருந்தும் அகதியாய் திரிகிறேன் என்று அவர் கண்ணீர்விட்டு அழுதார்.tw
No comments:
Post a Comment