Pages

Apr 30, 2013

தங்கத்தை கடத்த முயன்ற பெண் கைது 

 சுமார் 4.8 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்துவதற்கு முயன்ற பெண்ணொருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்துள்ளனர்.


இந்தியாவுக்கு தங்கத்தை கடத்துவதற்கு முயன்ற ராகமையை சேர்ந்த பெண்ணொவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையில் அடிக்கடி பயணிக்கும் ஒருவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தங்கத்தை பொத்தான்கள் போல தயாரித்து தன்னுடைய பயணப்பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கடத்துவதற்கு முயன்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment